சான்றிதழ் வழங்கல் - ரோபோட்டிக் போட்டி


 கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட ரொபோடிக்ஸ் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் (Provincial Level Robotic & Innovation Competition - 2026), கிரான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் திறமைச் சான்றிதழ் (Merit) பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியின் "புதிய கண்டுபிடிப்புகள்" பிரிவின் கீழ், "பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி" (Engineering Technology and Production) துறையில் கலந்துகொண்ட கிரான் மத்திய கல்லூரியின் தரம் 8 மாணவன் சஜேந்திரன் சதுர்ஷிகன் இச்சான்றிதழைத் பெற்றுள்ளார்.
இம்மாணவனுக்கு கிடைத்த சான்றிதழ் இன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டது.
இம்மானவனுக்கு எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Post a Comment

0 Comments