சாரணர்களின் சைக்கிள் பவனி

 

கிரான் மத்திய கல்லூரி சாரணர்களின் சைக்கிள் பவனி சிறப்பாக நடைபெற்றது

கிரான் மத்திய கல்லூரி சாரணர் மாணவர்களின் சைக்கிள் பவனி 01.08.2026 சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்பமான இப்பவனியில் கலந்து கொண்ட சாரணர் மாணவர்கள் கல்குடா புகையிரத நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். தொடர்ந்து மட்/க.கு/சீலாலங்கார தர்மாயதன பிரிவேனாவிற்கு விஜயம் செய்த மாணவர்கள், அங்குள்ள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம் செய்ததோடு, முனைமுருகன் ஆலயத்திற்கும் விஜயம் செய்து அங்கு நடைபெற்ற சிரமதானப் பணியிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும், மட்/க.கு/இந்துக் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சாரணர் பயிற்சி பாசறையில் கலந்து கொண்டிருந்த மாணவர்களையும் சாரணர் அதிகாரிகளையும் சந்தித்து, அனுபவங்களையும் நட்புறவையும் பரிமாறிக் கொண்டனர்.
சாரணர் இயக்கத்தின் ஒழுக்கம், சேவை மனப்பான்மை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சைக்கிள் பவனி, மாணவர்களுக்கு பயனுள்ள அனுபவமாக அமைந்ததுடன், சாரணர் செயற்பாடுகளின் சிறப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது
















Post a Comment

0 Comments