இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கடின பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் முதல் போட்டியில் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தை எதிர்த்து விளையாடிய கிரான் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் கிரான் மத்திய கல்லூரி 163 ஓட்டங்களையும் ஏறாவூர் அரபா வித்தியாலயம் 148 ஓட்டங்களையும் பெற்றது.மூன்றாவது இன்னிங்ஸில் கிரான் மத்திய கல்லூரி 32 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இவ்வெற்றிகளைப் பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு,
வெற்றிகளை பெறுவதற்கு வழிகாட்டல்களை வழங்கிய அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள் மற்றும் பயிற்சிகளை சிறப்பாக வழங்கிய வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப் பாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

0 Comments