Interhouse Sports Meet 2025

 The Interhouse Sports Meet of Mat/Kaku/Kiran Central College for the year 2025 was held grandly on 14.03.2025. The event took place at the Karuna United Sports Club Ground under the leadership of the school principal, Mr. S. Selvasuthesan.

The Chief Guest of the event was Mr. T. Idayakumar (Deputy Director of Education – Planning, Assistant Director of Education – Health & Physical Education, Divisional Director of Education – Eravur Pattu). The Guests of Honour were Mr. S. Dayalaseelan (Deputy Director of Education – Administration, Assistant Director of Education – Primary Education) and Mr. A. Jayakumanan (Divisional Director of Education – Koralaipattu).

Special guests included Mrs. R. Sivanesaraja (In Service Advisor (ISA) – Health & Physical Education), Mr. Venugopalraj (In Service Advisor (ISA) – Health & Physical Education), Mr. K. Kalairaj (Grama Niladhari – Kiran East), and Mrs. N. Sivakumar (Grama Niladhari – Kiran West). The event was also graced by the presence of Mr. M. Thavarajah (Former Principal of BT/KK/Kiran Central College), who attended as the Honored Special Guest.

Several other dignitaries participated, including:

  • The President of the Hindu Religious Development Board

  • The President of the Kiran Youth Association

  • The President of Karuna United Sports Club

  • The President of Kiran Hindu Temples

  • Zonal Education Officers of Koralaipattu region

  • Members of the School Development Society

  • Old Boys’ Association

  • Parents and students

The event began with religious observances and featured the Olympic torch lighting, march past, physical training display, karate display, and various sports competitions.

In addition, former principal Mr. M. Thavarajah and the school’s Vice Principal and Physical Education teacher Mr. R. Govindran were honored during the event.

In the house decoration and march past, Vaanmeeki House secured the first place.

Based on the overall competition results, Vaanmeeki House came first, while the second and third places were secured by the other houses.

The event concluded joyfully with prize distributions for the winning students.

Sincere thanks are extended to everyone who provided assistance and support in making this event a grand success

இல்ல விளையாட்டுப் போட்டி 2025

மட்/ககு/கிரான் மத்திய கல்லூரியின் 2025ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக 14.03.2025 அன்று நடைபெற்றது. கருணா ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் பாடசாலை அதிபர் திரு. செ.செல்வசுதேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக திரு. T. இதயகுமார் ( பிரதிக் கல்விப் பணிப்பாளர்- திட்டமிடல், உதவிக் கல்விப் பணிப்பாளர்-சுகாதாரமும் உடற்கல்வியும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்- ஏறாவூர்பற்று) அவர்களும் கௌரவ அதிதிகளாக திரு S. தயாளசீலன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்- முகாமைத்துவம், உதவிக் கல்விப் பணிப்பாளர்- ஆரம்பக் கல்வி) அவர்களும் திரு A. ஜெயக்குமணன் - கோட்டக் கல்விப் பணிப்பாளர் கோறளைப் பற்று) அவர்களும் சிறப்பு அதிதிகளாக திருமதி R. சிவநேசராஜா(சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் - சுகாதாரமும் உடற்கல்வியும்) திரு. வேணுகோபால்ராஜ் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் - சுகாதாரமும் உடற்கல்வியும்) அவர்களும் திரு கு. கலைராஜ் (கிராம சேவை உத்தியோகத்தர் - கிரான் கிழக்கு) திருமதி N. சிவகுமார் (கிராம சேவை உத்தியோகத்தர் - கிரான் மேற்கு) அவர்களும் கௌரவ விசேட அதிதியாக திரு.மா . தவராஜா (முன்னாள் அதிபர் மட்/ககு/கிரான் மத்திய கல்லூரி) அவர்களும் தலைவர்- இந்து சமய வளர்ச்சி மன்றம், தலைவர் - கிரான் வாழ் இளைஞர் அமைப்பு, தலைவர்- கருணா ஐக்கிய விளையாட்டுக் கழகம், தலைவர்- கிரான் இந்து ஆலயங்கள், கோறளைப் பற்றுக் கோட்ட அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்பு பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 

சமய ஆராதனைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஒலிம்பிக் தீபமேற்றல், அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, கராத்தே கண்காட்சி மற்றும் ஏனைய போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றன. 

அத்துடன் முன்னாள் அதிபர் திரு மா. தவராஜா அவர்களும் பாடசாலையின் உதவி அதிபரும் உடற்கல்வி ஆசிரியருமான திரு ற. கோவேந்திரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 

இல்ல அலங்காரத்தில்  வான்மீகி இல்லமும் அணிநடையில் இல்லமும் முதலிடம் பிடித்தன. 

ஒட்டு மொத்த போட்டி முடிவுகளின் அடிப்படையில் புள்ளிகளைப் பெற்று வான்மீகி இல்லம் முதலாமிடத்தையும் இல்லம் இரண்டாமிடத்தையும் இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன. 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்புடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. 

இந்நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடந்தேற உதவிகள் மற்றும் ஒத்தாசைகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். 




Post a Comment

0 Comments