வலய மட்ட விளையாட்டு போட்டி 2025

 கல்குடா கல்வி வலயத்தினால் நேற்று (16.07.2025) நடாத்தப்பட்ட 'வலய மட்ட விளையாட்டு போட்டி 2025' இல் கிரான் மத்திய கல்லூரி தடகள போட்டிகளில் மூன்றாவது இடத்தினை பெற்றதோடு,

ஒட்டு மொத்தமான குழு நிகழ்ச்சிகள், தடகள போட்டிகள் இரண்டிலும் சேர்த்து இரண்டாவது இடத்தை பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள், கிண்ணங்கள் இன்று (17.07.2025) காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்காக உழைத்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி. ரோகினி சதீஷ்குமார், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு. பத்மஹம்சன் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எமது பாடசாலை சமூகத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.








Post a Comment

0 Comments